மேஷ ராசி ராகு கேது பெயர்ச்சி 2026-2028

1. மேஷ ராசி நேயர்களுக்கு 10 ஆம் இட ராகு பல நன்மைகளை கொடுக்க கூடியதாக உள்ளது.

  1. தொழில் மாற்றம், கூடுதல் வருமானம் (பாஸிவ் இன்கம்), பதவி உயர்வு, திறமையை நிரூபித்து உயர் பதவி அடைதல் போன்ற எல்லா வாய்ப்புகளையும் இந்த 10 ஆம் இட ராகு மேஷ ராசிக்கு அள்ளி தரப்போகிறது.
  2. 10 ஆம் இட ராகு தொழில் அல்லது மற்ற சேமிப்பு திட்டங்களில் மேஷ ராசியினரின் எதிர்காலம் கருதி அவர்களை வலுக்கட்டாயமாக முதலீடு செய்ய வைத்துவிடும்.
  3. இந்த 10 ஆம் இட யோகக்காரகன் ராகு, வேலை, தொழில், வருமானம், பதவி போன்ற ஏதாகிலும் ஒன்றில் மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பார்.
  4. மேஷ ராசி நேயர்களுக்கு 4 இல் கேது திடீர் இட மாற்றம், வேலை மாற்றம் ஆகியவற்றை கொண்டு வரும்.
  5. இது ENT, நுரையீரல், வயிறு சம்பந்தமான உடல் நலப்பிரச்சினைகளை கொண்டுவரும். சரியான மருத்துவ ஆலோசனை நோயில் இருந்து மீளுவதற்கான சிறந்த வழி.
  6. 4 இல் கேது வீடு, வாகனங்களை மறுசீரமைக்க உதவி செய்யும். நோய்களையும் கூட உடலில் இருந்து அகற்றி விடும்.
  7. தாயின் உறவு, ஆரோக்கியம், அன்பு, பாசம் இவற்றில் 4 ஆம் இட கேது சில சோதனைகளை கொடுப்பர். உங்கள் ஞானமான அணுகுமுறையால் இவற்றிலிருந்து வெளிவரலாம்.



Copyright 2026 Life Horoscope. All rights reserved.
Call us Now