2027 புத்தாண்டு ராசி பலன்கள் – பணம், காதல், தொழில் எப்படி இருக்கும்?

புதிய நம்பிக்கைகள், புதிய கனவுகள் மற்றும் புதிய எதிர்பார்ப்புகளுடன் 2027 ஆம் ஆண்டை வரவேற்கத் தயாராகிவிட்டோம். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது? உங்கள் பொருளாதார நிலை உயருமா? காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்குமா? தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படுமா?

மேஷ ராசிக்கான 2027 புத்தாண்டு பலன்கள் | Mesham 2027 New Year Prediction
https://youtu.be/-DGzvXtMLYw?si=czhTY4VbEJ4rc0Vp

ரிஷப ராசிக்கான 2027 புத்தாண்டு பலன்கள் | Rishabam 2027 New Year Prediction
https://youtu.be/lePtT5l7Suw?si=Asc2p3Mqv5SGAY1C

மிதுன ராசிக்கான 2027 புத்தாண்டு பலன்கள் | Mithunam 2027 New Year Prediction
https://youtu.be/NzU6p1fPwb8?si=i0PowhgKMps3z6p2

கடக ராசிக்கான 2027 புத்தாண்டு பலன்கள் | Kadagam 2027 New Year Prediction
https://youtu.be/TWQOOavd8fk?si=xkwkTAcOLsZznLjv

சிம்ம ராசிக்கான 2027 புத்தாண்டு பலன்கள் | Simmam 2027 New Year Prediction
https://youtu.be/zL07PQi4-Lo?si=vn3ohngYByqgt48E

கன்னி ராசிக்கான 2027 புத்தாண்டு பலன்கள் | Kanni 2027 New Year Prediction
https://youtu.be/_hF2HT5iJ9I?si=zLhtzrEm-xWQOW4m

துலாம் ராசிக்கான 2027 புத்தாண்டு பலன்கள் | Thulam 2027 New Year Prediction
https://youtu.be/l38ilL_r-YU?si=vzBJ-PrlgQ3f7gar

விருச்சிக ராசிக்கான 2027 புத்தாண்டு பலன்கள் | Viruchigam 2027 New Year Prediction
https://youtu.be/iXJGZEMdDYU?si=0aHN8NI9B5SN0zTP

தனுசு ராசிக்கான 2027 புத்தாண்டு பலன்கள் | Dhanusu 2027 New Year Prediction
https://youtu.be/iqvaJpDbTm0?si=t0SVu-I-mYDFKKvB

மகர ராசிக்கான 2027 புத்தாண்டு பலன்கள் | Magaram 2027 New Year Prediction
https://youtu.be/Yp99N3BI8NY?si=8_MOKrYf4USJDH41

கும்ப ராசிக்கான 2027 புத்தாண்டு பலன்கள் | Kumbam 2027 New Year Prediction
https://youtu.be/n-I6krPrTLI?si=sCHcAmxjiTvVrx3C

மீன ராசிக்கான 2027 புத்தாண்டு பலன்கள் | Meenam 2027 New Year Prediction
https://youtu.be/i5YMhT-S1UA?si=sUWrLsc2nR2Y-E5A


ராகு 11 ஆம் இடத்திற்கு வருவதினால் மீன ராசிநேயர்கள் தொழில், பதவி உயர்வு, பணம், சேமிப்பு, மற்றும் வெற்றி போன்ற மாபெரும் நன்மைகளை அடையப்போகிறார்கள்..

மீன ராசியினரின் அயல்நாட்டில் கல்வி, வெளிநாட்டில் வேலை மற்றும் வெளிநாடு பயணம், போன்ற ஆசை, திட்டங்கள் கனிந்து கைகூடி வரும் காலம் இந்த ராகுவின் 11 ஆம் இட இருக்கை …

ராகுவின் 11 ஆம் இட வருகைக்கு பின் ஜென்ம சனியும் விலகி மீன ராசியினருக்கு அமோகமான ஒரு சூழ்நிலை அமைய உள்ளது …

5 ஆம் இடத்திற்கு கேது வருவதால் மீன ராசியினர் வயிறு, குடல் சம்பந்தப்பட்ட, அசிடிட்டி போன்ற சில உடல் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது.

5 ஆம் இட கேதுவால் மீன ராசியினருக்கு மனதில் இனம் புரியாத குழப்பங்கள், பயம், முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் வரவும் வாய்ப்பு உள்ளது.

மீன ராசி நேயர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி 2026 மிகவும் மேலானதாகவே உள்ளது..

11 ஆம் இட ராகுவால் வெற்றி, புகழ், பணம் ஒருபுறம் இருக்க , 5 ஆம் இட கேதுவால் மனக்குழப்பங்கள் மற்றும் தெளிவற்ற சூழ்நிலையும் மீன ராசி நேயர்களுக்கு மறுபுறம் காணப்படுகிறது..


கும்ப ராசி நேயர்களுக்கு 12 இல் ராகு தெளிவான அறிவு, தீர்க்கமான ஞானமும், புரிதலும், வாழ்க்கையை பற்றிய ஒரு அடையாளத்தையும் மற்றும் ஒரு தெளிவான பாதையை காட்ட உள்ளார்.

உங்கள் உடல், மனம்,குடும்பம், உறவு, காதல், படிப்பு, வேலை போன்ற விஷயங்களில் உள்ள பிரச்சினைகளில் 50% தீர்வு வர இருக்கும் நேரம் இது.

நோய்கள், விபத்துகள், சோதனைகளில் இருந்து இந்த 6 இல் கேது கும்ப ராசி நேயர்களை விடுவிக்கும் காலம்.

உங்களின் மனசஞ்சலங்கள், மனவருத்தங்கள் யாவற்றையும் இந்த 6 இல் கேது நிவர்த்தி செய்ய போகிறது.

வருத்தம், குழப்பம், சோதனை, கடன், முயற்சிகளில் தோல்வி, நோய், போன்றவற்றில் இருந்து கும்ப ராசி நேயர்களுக்கு இந்த ராகு கேது 2026 பெயர்ச்சி தெளிவான ஒரு சூழ்நிலையை உண்டாக்க உள்ளது.


மகர ராசி நேயர்களுக்கு 1 இல் ராகு உங்களுடைய ஆற்றல், அறிவு, தெளிவு, முன்னேற்றம், புரிதல், திறமைகளை நீங்கள் கண்டு அறியச் செய்யும் காலம் இது.

மகர ராசி சிலரை இந்த 1 ஆம் இட ராகு முதலில் சில விஷயங்களில் நம்பி ஏமாற வைத்து பிறகு அதைப்பற்றிய நல்ல புரிதலையும், தெளிவையும் கொடுக்கும்.

1 ஆம் இட ராகு போலியான விஷயங்களை காண்பித்து, தெளிவை கொடுத்து பின்பு ஞானத்தோடு சவால்களை மேற்கொள்ள உதவி செய்யும்.

காதல், உறவு, நட்பு, பிசினஸ் பார்ட்னர்ஷிப், பயணங்கள், முயற்சிகள் போன்ற எல்லாவற்றிலும் மகர ராசியினர் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டிய கால கட்டத்தை இந்த 7 இல் கேது உருவாக்கும்.

உடல்நிலை மற்றும் பயணம் போன்ற விஷயங்களில் நீங்கள் விழிப்புடன் இருத்தல் நல்லது.

உங்கlளின் பொறுமையும், ஞானமும், புரிதலும், சகிப்புத்தன்மையும் வளரக்கூடிய காலம் இந்த 7 ஆம் இட கேது.

இந்த ராகு கேது 2026 பெயர்ச்சி மகர ராசி நேயர்களை சோதித்து உங்களை மெருகேற்றி பலப்படுத்த போகிறது.


2 இல் ராகு தனுசு ராசி நேயர்களுக்கு நல்ல பண வரவை கொடுப்பார். கூடுதல் வேலை, கூடுதல் தொழில் மூலமாக கூடுதல் வருமானத்தை கொடுக்க இருக்கிறார்.

உங்களது வேலை, படிப்பு, எக்ஸாம், சம்பந்தப்பட்ட பயணங்களில் இந்த 2 ஆம் இட ராகு அதை சாதகமாக்கி கொடுப்பார்.

நீங்கள் கடன் கேட்கப்போகும் இடங்களில் 2 ஆம் இட ராகு தனுசு ராசியான உங்களுக்கு மிகப்பெரிய அளவிலான கடன் கிடைக்க வழி திறப்பார். அந்த பணத்தை நீங்கள் தான் சரியான முறையில் கையாள வேண்டும்.

2 இல் ராகு குடும்ப உறவுகளில் சிறு சிறு பிரச்சினைகளை கொண்டுவரும். நீங்கள் இந்த சூழ்நிலையை பொறுமையாக கையாள வேண்டும். ராகு கேது தோஷம் உள்ளவங்களுக்குதான் இது அதிகமாக பாதிக்கும். மற்றவர்களுக்கு ஒரு நாள் சண்டை மாதிரி நடக்கும்.

பணம் கொடுக்கல் வாங்குதலில் அதிகப்படியான கவனத்துடன் செயல்படுங்கள்.

அல்ர்ஜி, ENT தொடர்பான பிரச்சினைகள், நுரையீரல், தோல் சம்பந்தமான நோய்கள் வரலாம். மேலும் சிலர் சில கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பார்கள். அவற்றிலிருந்து இந்த 2 ஆம் இட ராகு அவர்களுக்கு விடுதலை தரப்போகிறார்.

அல்ர்ஜி, ENT தொடர்பான பிரச்சினைகள், நுரையீரல், தோல் சம்பந்தமான நோய்கள் வரலாம். மேலும் சிலர் சில கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பார்கள். அவற்றிலிருந்து இந்த 2 ஆம் இட ராகு அவர்களுக்கு விடுதலை தரப்போகிறார்.

தனுசு ராசியினரின் தீராத நோய்கள், தீராத பிரச்சனைகள், தீராத கடன்கள், தீராத வம்புகள், வழக்குகள், பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் 8 இல் கேது ஒரு முடிவை கொடுக்க இருக்கிறார்.

உங்களுக்கு தொந்தரவு செய்யும் உறவு, தேவையில்லாத சுமை, வேதனைகள், நோய்கள் போன்ற எல்லா எதிர்மறையான விஷயங்களையும் உங்களை விட்டு அகற்றிவிடுவார்.

வாக்குறுதி, பணம், ரிலேஷன்ஷிப், போன்ற விஷயங்களில் கமிட்மென்ட் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

தனுசு ராசி நேயர்களே, கடவுளின் நம்பிக்கையோடு கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க இந்த ராகு-கேது 2026 பெயர்ச்சி உங்களை அறிவுறுத்துகிறது.


விருச்சிகம் ராசி நேயர்களுக்கு 3 இல் ராகு மிகச்சிறந்த வேலை மற்றும் தொழில் தொடர்பான மிகப்பெரிய தொடர்புகளை (contacts) கொடுப்பார். இது நல்ல துணிச்சலையும், அசாதாரண தைரியத்தையும் கொடுக்கும் கால கட்டம்.

உங்கள் இளைய சகோதர சகோதரி மூலமாக நீங்கள் மிகப்பெரிய support ஐ பெறலாம்.

விருச்சிகம் ராசி நேயர்களை 3 ஆம் இட ராகு அகலக்கால் எடுத்து வைக்க செய்து அவர்களின் முயற்சிகளை விரிவாக்க உதவுகிறது.

கோயில் கட்டுதல், கோயில் தொடர்பான பணிகள் மற்றும் சமூக நலப்பணிகளை செய்ய விருப்பம் உள்ள விருச்சிகம் ராசிக்கு இப்போது 9 ஆம் இட கேது ஒரு தருணத்தை அமைத்து கொடுக்கிறது.

தந்தை, தந்தை வழியிலான அல்லது அவர் பரம்பரை வழியான ஆசீர்வாதங்கள் உங்களை வந்து சேரும். உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தையும் இந்த 9 ஆம் இட கேது நிறைவேற்ற வைக்கும்.

உங்களின் எதிர்மறைகளை நீக்கி அதிர்ஷ்டத்தை கொண்டுவரப்போக்கிறது இந்த 9 ஆம் இட கேது.

9 ஆம் இட கேது விருச்சிகம் ராசி நேயர்களுக்கு கடல் கடந்து செல்லும் வாய்ப்பை உருவாக்கும். இதில் பெரிய அளவிலான வெற்றியை தரும்.

விருச்சிகம் ராசி நேயர்களுக்கு இது வரை இல்லாத தொழில்நுட்ப அறிவு, ஆற்றல் மற்றும் பலம் அனைத்தையும் கொண்டு கொடுக்கும் நேரம் இந்த 9 ஆம் இட கேது.

இந்த ராகு-கேது 2026 பெயர்ச்சியினால் அனுபவம், அறிவு, ஆற்றல், பலம், தைரியம், பயணம், வெற்றி, சேவைகள், மற்றும் ஆசீர்வாதங்கள் போன்ற சிறப்பான பலன்களை விருச்சிகம் ராசியினர் அடைய உள்ளனர். இவைகளால் இவர்கள் திருப்தி ஆவார்கள்.


துலாம் ராசி நேயர்களுக்கு 4 இல் ராகு பதவி, அதிகாரத்தில் மாற்றங்களை கொண்டுவரும் நேரம் இது.

மிகப்பெரிய பிரமாண்டமான வீடு அல்லது வாகனத்தை வாங்கும் யோகம் உங்களுக்கு இப்பொழுது உண்டு.

நரம்பு, எலும்பு, குடல் மற்றும் நுரையீரல் சம்மந்தமான உறுப்புகளில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால் 4 இல் ராகு அதற்குண்டான சரிசெய்யும் வழிகளை உருவாக்கும்.

4 இல் ராகு உங்கள் தாய்க்கும் உங்களுக்குமான சில கருத்து வேறுபாடுகளை கொண்டுவரும் வாய்ப்புகளை உருவாக்கும். எனவே இந்த விஷயத்தில் உங்களின் கவனமான கையாளுதல் அவசியம்.

10 இல் கேது இடமாற்றத்தை உண்டாக்கும். துலாம் ராசியினரின் வெளிநாடு படிப்பு மற்றும் வேலைக்கான வழிகளை திறந்து கொடுக்கும்.

பதவி, அதிகாரம், தொழில் மற்றும் வேலை வாய்ப்பையும் வழங்கும். இவை அனைத்தையும் சில சவால்களை சந்தித்த பிறகே பெறவும் போகிறீர்கள்.


கன்னி ராசி நேயர்களுக்கு 5 இல் ராகு மனதலவிலான தெளிவை கொடுக்க இருக்கிறது. உங்கள் புத்தியின் ஆற்றல், மனதின் தெளிவு மற்றும் உங்களின் ஞானம் போன்றவற்றில் கன்னி ராசிக்கு இருக்கும் அநேக குழப்பங்களுக்கு தெளிவு உண்டாக போகிறது.

உங்களுடைய past karma, உங்கள் குழந்தைகளில் பேரில் கொண்ட திட்டங்கள், உங்கள் plans, குழந்தைகள் மூலமாக உங்களுக்கு வரும் சோதனை, அதை எப்படி சரி செய்யலாம், அவர்களின் ப்ராப்லம்ஸை எப்படி solve பண்ணலாம் போன்ற விஷயங்களில், ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் detail ஆன பலனை கொண்டு வரப்போது. ராகு யோகக்காரகன்.

5 இல் ராகு உங்கள் முன்ஜென்ம பாவ, புண்ணியங்களை பொறுத்து இப்போது பலன்களை கொடுப்பார்.

கன்னி ராசி நேயர்களுக்கு 5 இல் ராகு நன்மையானதை கொடுக்க போகிறது. அதோடு கூடசேர்ந்து சில கஷ்டங்களையும் சுமக்க வைக்க போகிறது.

11 இல் கேதுவும் கன்னி ராசி நேயர்களுக்கு மிகுந்த ஆதாயத்தை கொடுக்கும். உங்களுக்கு பணம், தொழில், வேலை, வெற்றி போன்றவைகள் வரப்போகும் நேரம் இது.

Foreign travel, foreign education மற்றும் foreign job போன்ற உங்களின் முயற்சிகளுக்கு கேது மிகவும் உதவுவார்.

உறவுகளால் ஏற்பட்டக்கூடிய மன வேதனைகள் மன உள்ளச்சல் விரிச்சல்கள் எல்லாவற்றையும் இந்த ஞானகாரகன் கேது சரிசெய்வார்.

உடல் பிரச்சினைக்கான தீர்வு, வெளிநாடு பயணத்தில் வெற்றி மற்றும் பொருளாதார முன்னேற்றம் போன்றவை 11 ஆம் இட கேதுவால் வரும் ஆதாயங்கள்.

குழப்பங்கள் வந்து தெளிவு பிறத்தல், புத்தி கூர்மை அதிகரிப்பு , சிறப்பாக வாழ்க்கையை பிளான் செய்வது போன்றவை 5 ஆம் இட ராகுவால் வரும் நன்மைகள்.

கெட்டதை விட நல்லதை அதிகமாக கொடுக்கக்கூடியது இந்த ராகு கேது பெயர்ச்சி 2026


சிம்ம ராசி நேயர்களுக்கு 6 இல் ராகு வருவதால் உங்களின் எதிரிகள் அழிந்து உங்களுக்கு துரோகம், அநியாயம் மற்றும் கெடுதல் செய்தவர்கள் மூலமாகவே நீங்கள் ஆதாயம், வளர்ச்சி, முன்னேற்றம், மற்றும் வெற்றி அடையும் காலம் இது.

நரம்பு, எலும்பு, வயிறு, இருதயம், தோல் சம்பத்தப்பட்ட நோய்களின் பிடியில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும் நேரம் இந்த 6 ஆம் இட ராகுவின் வருகை.

சிம்ம ராசி நேயர்களின் தடங்கல்கள் விலகி, நல்லவர்களின் அன்பும் அநேகர் ஆதரவு கரம் நீட்டும் நேரம் இது.

சிம்ம ராசியினரின் மனக்குழப்பம், கஷ்டங்கள் ஆகியவை 12 ஆம் இட கேதுவால் முடியப்போகும் நேரம் வந்துவிட்டது. இனி தெளிவும் மகிழ்ச்சியும் உங்கள் வாழ்வில் உறுதி.

சிம்ம ராசி நேயர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி 2026 அநேக நன்மைகளையும் நல்ல மாற்றங்களையும் கொண்டுவர உள்ளது..


கடக ராசிகாரர்களுக்கு 7 இல் ராகு பொய்யான நபர்களை, தங்களோடு ஒன்றாக இணைந்து உறவாடும் நபர்களை அடையாளம் கண்டு கொள்ள செய்து உங்களை விழித்திருக்கச்செய்யும். உங்களின் பொறுமையான அணுகுமுறையால் இவர்களின் வஞ்சக வலையில் விழாமல் தப்பித்து கொள்ளலாம்.

7 ஆம் இட ராகு இருதயம், குடல், வயிறு, அடிவயிறு, தோல் மற்றும் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளோடு கடக ராசிகாரர்களை தொடர்புபடுத்துவதால், இவர்கள் ஜாக்கிரதையாக இருந்து தங்கள் நலனை பாதுகாத்து கொள்வது அவசியம்.

கடக ராசிக்கு 1 ஆம் இடத்தில் வரும் கேது இவர்களின் தெளிவற்ற, குழப்பமான சூழ்நிலையை மாற்றி புதிதாக ஒரு விஷயத்தை உருவாக்குவார். தனக்கே உரிய ஞான ஒளியை தந்து இவர்களின் குறைவுகளையெல்லாம் களைந்து விடுவார்.

இந்த ராகு கேது பெயர்ச்சி 2026 கடக ராசிகாரர்களுக்கு தீயவற்றை களைந்து, நல்லனவற்றையே தங்கச்செய்யும்.


Copyright 2026 Life Horoscope. All rights reserved.
Call us Now