2 இல் ராகு தனுசு ராசி நேயர்களுக்கு நல்ல பண வரவை கொடுப்பார். கூடுதல் வேலை, கூடுதல் தொழில் மூலமாக கூடுதல் வருமானத்தை கொடுக்க இருக்கிறார்.
உங்களது வேலை, படிப்பு, எக்ஸாம், சம்பந்தப்பட்ட பயணங்களில் இந்த 2 ஆம் இட ராகு அதை சாதகமாக்கி கொடுப்பார்.
நீங்கள் கடன் கேட்கப்போகும் இடங்களில் 2 ஆம் இட ராகு தனுசு ராசியான உங்களுக்கு மிகப்பெரிய அளவிலான கடன் கிடைக்க வழி திறப்பார். அந்த பணத்தை நீங்கள் தான் சரியான முறையில் கையாள வேண்டும்.
2 இல் ராகு குடும்ப உறவுகளில் சிறு சிறு பிரச்சினைகளை கொண்டுவரும். நீங்கள் இந்த சூழ்நிலையை பொறுமையாக கையாள வேண்டும். ராகு கேது தோஷம் உள்ளவங்களுக்குதான் இது அதிகமாக பாதிக்கும். மற்றவர்களுக்கு ஒரு நாள் சண்டை மாதிரி நடக்கும்.
பணம் கொடுக்கல் வாங்குதலில் அதிகப்படியான கவனத்துடன் செயல்படுங்கள்.
அல்ர்ஜி, ENT தொடர்பான பிரச்சினைகள், நுரையீரல், தோல் சம்பந்தமான நோய்கள் வரலாம். மேலும் சிலர் சில கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பார்கள். அவற்றிலிருந்து இந்த 2 ஆம் இட ராகு அவர்களுக்கு விடுதலை தரப்போகிறார்.
அல்ர்ஜி, ENT தொடர்பான பிரச்சினைகள், நுரையீரல், தோல் சம்பந்தமான நோய்கள் வரலாம். மேலும் சிலர் சில கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பார்கள். அவற்றிலிருந்து இந்த 2 ஆம் இட ராகு அவர்களுக்கு விடுதலை தரப்போகிறார்.
தனுசு ராசியினரின் தீராத நோய்கள், தீராத பிரச்சனைகள், தீராத கடன்கள், தீராத வம்புகள், வழக்குகள், பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் 8 இல் கேது ஒரு முடிவை கொடுக்க இருக்கிறார்.
உங்களுக்கு தொந்தரவு செய்யும் உறவு, தேவையில்லாத சுமை, வேதனைகள், நோய்கள் போன்ற எல்லா எதிர்மறையான விஷயங்களையும் உங்களை விட்டு அகற்றிவிடுவார்.
வாக்குறுதி, பணம், ரிலேஷன்ஷிப், போன்ற விஷயங்களில் கமிட்மென்ட் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.
தனுசு ராசி நேயர்களே, கடவுளின் நம்பிக்கையோடு கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க இந்த ராகு-கேது 2026 பெயர்ச்சி உங்களை அறிவுறுத்துகிறது.






