விருச்சிகம் ராசி நேயர்களுக்கு 3 இல் ராகு மிகச்சிறந்த வேலை மற்றும் தொழில் தொடர்பான மிகப்பெரிய தொடர்புகளை (contacts) கொடுப்பார். இது நல்ல துணிச்சலையும், அசாதாரண தைரியத்தையும் கொடுக்கும் கால கட்டம்.
உங்கள் இளைய சகோதர சகோதரி மூலமாக நீங்கள் மிகப்பெரிய support ஐ பெறலாம்.
விருச்சிகம் ராசி நேயர்களை 3 ஆம் இட ராகு அகலக்கால் எடுத்து வைக்க செய்து அவர்களின் முயற்சிகளை விரிவாக்க உதவுகிறது.
கோயில் கட்டுதல், கோயில் தொடர்பான பணிகள் மற்றும் சமூக நலப்பணிகளை செய்ய விருப்பம் உள்ள விருச்சிகம் ராசிக்கு இப்போது 9 ஆம் இட கேது ஒரு தருணத்தை அமைத்து கொடுக்கிறது.
தந்தை, தந்தை வழியிலான அல்லது அவர் பரம்பரை வழியான ஆசீர்வாதங்கள் உங்களை வந்து சேரும். உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தையும் இந்த 9 ஆம் இட கேது நிறைவேற்ற வைக்கும்.
உங்களின் எதிர்மறைகளை நீக்கி அதிர்ஷ்டத்தை கொண்டுவரப்போக்கிறது இந்த 9 ஆம் இட கேது.
9 ஆம் இட கேது விருச்சிகம் ராசி நேயர்களுக்கு கடல் கடந்து செல்லும் வாய்ப்பை உருவாக்கும். இதில் பெரிய அளவிலான வெற்றியை தரும்.
விருச்சிகம் ராசி நேயர்களுக்கு இது வரை இல்லாத தொழில்நுட்ப அறிவு, ஆற்றல் மற்றும் பலம் அனைத்தையும் கொண்டு கொடுக்கும் நேரம் இந்த 9 ஆம் இட கேது.
இந்த ராகு-கேது 2026 பெயர்ச்சியினால் அனுபவம், அறிவு, ஆற்றல், பலம், தைரியம், பயணம், வெற்றி, சேவைகள், மற்றும் ஆசீர்வாதங்கள் போன்ற சிறப்பான பலன்களை விருச்சிகம் ராசியினர் அடைய உள்ளனர். இவைகளால் இவர்கள் திருப்தி ஆவார்கள்.






