கடக ராசி ராகு கேது பெயர்ச்சி 2026-2028

கடக ராசிகாரர்களுக்கு 7 இல் ராகு பொய்யான நபர்களை, தங்களோடு ஒன்றாக இணைந்து உறவாடும் நபர்களை அடையாளம் கண்டு கொள்ள செய்து உங்களை விழித்திருக்கச்செய்யும். உங்களின் பொறுமையான அணுகுமுறையால் இவர்களின் வஞ்சக வலையில் விழாமல் தப்பித்து கொள்ளலாம்.

7 ஆம் இட ராகு இருதயம், குடல், வயிறு, அடிவயிறு, தோல் மற்றும் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளோடு கடக ராசிகாரர்களை தொடர்புபடுத்துவதால், இவர்கள் ஜாக்கிரதையாக இருந்து தங்கள் நலனை பாதுகாத்து கொள்வது அவசியம்.

கடக ராசிக்கு 1 ஆம் இடத்தில் வரும் கேது இவர்களின் தெளிவற்ற, குழப்பமான சூழ்நிலையை மாற்றி புதிதாக ஒரு விஷயத்தை உருவாக்குவார். தனக்கே உரிய ஞான ஒளியை தந்து இவர்களின் குறைவுகளையெல்லாம் களைந்து விடுவார்.

இந்த ராகு கேது பெயர்ச்சி 2026 கடக ராசிகாரர்களுக்கு தீயவற்றை களைந்து, நல்லனவற்றையே தங்கச்செய்யும்.


Copyright 2026 Life Horoscope. All rights reserved.
Call us Now