சிம்ம ராசி ராகு கேது பெயர்ச்சி 2026-2028

சிம்ம ராசி நேயர்களுக்கு 6 இல் ராகு வருவதால் உங்களின் எதிரிகள் அழிந்து உங்களுக்கு துரோகம், அநியாயம் மற்றும் கெடுதல் செய்தவர்கள் மூலமாகவே நீங்கள் ஆதாயம், வளர்ச்சி, முன்னேற்றம், மற்றும் வெற்றி அடையும் காலம் இது.

நரம்பு, எலும்பு, வயிறு, இருதயம், தோல் சம்பத்தப்பட்ட நோய்களின் பிடியில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும் நேரம் இந்த 6 ஆம் இட ராகுவின் வருகை.

சிம்ம ராசி நேயர்களின் தடங்கல்கள் விலகி, நல்லவர்களின் அன்பும் அநேகர் ஆதரவு கரம் நீட்டும் நேரம் இது.

சிம்ம ராசியினரின் மனக்குழப்பம், கஷ்டங்கள் ஆகியவை 12 ஆம் இட கேதுவால் முடியப்போகும் நேரம் வந்துவிட்டது. இனி தெளிவும் மகிழ்ச்சியும் உங்கள் வாழ்வில் உறுதி.

சிம்ம ராசி நேயர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி 2026 அநேக நன்மைகளையும் நல்ல மாற்றங்களையும் கொண்டுவர உள்ளது..


Copyright 2026 Life Horoscope. All rights reserved.
Call us Now