துலாம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2026-2028

துலாம் ராசி நேயர்களுக்கு 4 இல் ராகு பதவி, அதிகாரத்தில் மாற்றங்களை கொண்டுவரும் நேரம் இது.

மிகப்பெரிய பிரமாண்டமான வீடு அல்லது வாகனத்தை வாங்கும் யோகம் உங்களுக்கு இப்பொழுது உண்டு.

நரம்பு, எலும்பு, குடல் மற்றும் நுரையீரல் சம்மந்தமான உறுப்புகளில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால் 4 இல் ராகு அதற்குண்டான சரிசெய்யும் வழிகளை உருவாக்கும்.

4 இல் ராகு உங்கள் தாய்க்கும் உங்களுக்குமான சில கருத்து வேறுபாடுகளை கொண்டுவரும் வாய்ப்புகளை உருவாக்கும். எனவே இந்த விஷயத்தில் உங்களின் கவனமான கையாளுதல் அவசியம்.

10 இல் கேது இடமாற்றத்தை உண்டாக்கும். துலாம் ராசியினரின் வெளிநாடு படிப்பு மற்றும் வேலைக்கான வழிகளை திறந்து கொடுக்கும்.

பதவி, அதிகாரம், தொழில் மற்றும் வேலை வாய்ப்பையும் வழங்கும். இவை அனைத்தையும் சில சவால்களை சந்தித்த பிறகே பெறவும் போகிறீர்கள்.


Copyright 2026 Life Horoscope. All rights reserved.
Call us Now